ஐ.சி.யூ பிரிவில் வென்டிலேட்டர் வெடித்து ஒரு நோயாளி உயிரிழப்பு.!
மத்தியப் பிரதேசத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வெடித்தால் ஒரு நோயாளி உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபருடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டர் வெடித்து தீப்பிடித்ததால் நேற்று உயிரிழந்தார். இதை, தீ விபத்தின்போது நோயாளி இறக்கவில்லை என்று மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவ்புரி மாவட்ட ஆட்சியர் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவரின் மகன் முகமது தாஹிர், குணாவில் வசிக்கும் அவரது தந்தை உடல் நலக்குறைவால் சிவ்புரி மாவட்ட மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவருடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டர் நேற்று வெடித்தது, இதன் காரணமாக என் தந்தை படுத்திருந்த படுக்கையில் இருந்த மெத்தை தீப்பிடித்தது என்று தாஹிர் கூறினார். மேலும், தீவிபத்து காரணமாக, ஐ.சி.யூ அறையில் புகை நிரம்பியது. இதனால், என் தந்தையை அங்கிருந்து வெளியேறியபோது சரியான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் அவர் இறந்தார் என்று குற்றம் சாட்டினார்.