இந்தியாவில் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன! அதற்கு யோசனை கூறும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு!
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி விரிவாக பேசினார்.
அதாவது, இந்தியாவில் இதுவரை 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் பல வழக்குகள் 50 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், உச்சநீதிமன்றமானது, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் அதன் கிளைகளை நிறுவ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 130-இன் கீழ் அனுமதி உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்புக்கான கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். என்றும் மேலும் ஒரு வழக்கை பொறுத்து அதன் கால அளவை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசினார். இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என தனது யோசனையை தெரிவித்தார்.