தெலங்கானாவை சேர்ந்த வேலாடி அர்ஜுன் தனது இரு அத்தை மகள்களை ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். கடந்த 3 வருட காலமாக இவரது அத்தை மகள்களான கான்பூரை சேர்ந்த உஷாராணி மற்றும் ஷம்புக்குடா கிராமத்தை சேர்ந்த சுரேகா என்ற இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரையும் 1 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அதை இருவரிடமும் கேட்டுள்ளார். இருவரும் ஒப்புக்கொள்ள, வீட்டில் இதுகுறித்து பேசிய போது, பெரியவர்கள் இருவரையும் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இது முறையான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளனர். ஆனால், இரு அத்தை மகள்களும் கட்டினால் இவரை தான் கட்டுவோம் என்ற முடிவான கருத்தை வீட்டில் எடுத்து வைத்துள்ளனர்.
இதன் பின்னர் வேறு வழியின்றி பெரியவர்கள் சம்மதிக்க, இருவரையும் கடந்த 14 ஆம் தேதி ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரையும் இவர்களது ஆதிவாசிகள் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இது போன்ற சம்பவம் அங்கு நிகழாததால் இந்த திருமணம் குறித்த பேச்சு தான் அங்கு பரவலாக பேசப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…