போக்குவரத்து போலீசாரிடம் ரூ. 49,000 அபராதம் செலுத்திவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வாகன உரிமையாளர்
பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்திய நிலையில் அது தொடர்பான நீண்ட ரசீதுகளை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. வடக்கு பெங்களூரு போக்குவரத்து துணை கமிஷனர் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக, KA50-S-3579 வாகனத்தின் உரிமையாளர் முனிராஜிடம் இருந்து 49,100/- ரூபாய் அபராதம் முழுவதையும் வசூலித்தோம் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுடன், வாகனத்தின் உரிமையாளரான முனிராஜ், இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் நின்றுக் கொண்டு அவர் செலுத்திய அபராதத்தின் நீண்ட ரசீதுகளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Read More – பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிக்கு 10 நாட்கள் பரோல் வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் பெங்களூரு போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையில் 84 வாகனங்களின் உரிமையாளர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை செலுத்தாததால் அவர்களின் வாகனங்கள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
For Traffic Violations,Today we collected 49,100/- rs fine full amount from Muniraju owner of KA50-S-3579 vehicle. @blrcitytraffic @Jointcptraffic pic.twitter.com/Y5mP5NI6yT
— DCP Traffic North, Bengaluru (@DCPTrNorthBCP) February 23, 2024