அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள ஆழமான ஏரியில் நேற்று எல்லைப் பாதுகாப்புப் படையின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல் போனார். இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டிய மங்காச்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜௌடாங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஏரியில் இருந்து ஒரு வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் காணவில்லை என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார். மூத்த அதிகாரி சிகே உபாத்யாய் கூறுகையில், ஓட்டுநர் உட்பட ஐந்து வீரர்கள் ரோந்துக்காக எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து 20-30 அடி ஆழமான ஏரியில் விழுந்துள்ளது.
அப்போது மூன்றுவீரர்கள் பாதுகாப்பாக நீச்சலடித்து வெளிய வந்தனர். காணாமல் போன இருவரில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொருவரை இன்னும் காணவில்லை. தேடுதல் பணி நடந்து வருகிறது என்று உபாத்யாய் கூறினார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…