வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என பிரதமர் மோடி ட்வீட்.
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2022