ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியா உட்பட 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டிலுள்ள ரோம் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த 16வது ஜி 20 அமைப்பின் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மரியோ அவர்களின் அழைப்புக்கு இணங்கி பிரதமர் மோடி அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில்கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி அவர்கள் தனி விமானத்தில் இத்தாலி சென்ற நிலையில், இன்று வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடி அவர்கள் போப் பிரான்சிஸ் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…