பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவை மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பி.எம்.சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் ரூ.95 கோடி கடன் பெற்றதாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையில் , பிரவீன் ராவத் தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலுத்தியதும் ,சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவிற்கு ரூ.55 லட்சம் வட்டி இல்லாத கடனாக அனுப்பியதும் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ,அதை தவிர்த்து வந்தார்.இறுதியாக கடந்த 4-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.இந்நிலையில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அரசியலில் உள்ள எதிரிகளை துன்புறுத்துவதற்கும் ,அவர்களை மவுனமாக்குவதற்கும் மத்திய விசாரணை நிறுவனங்களான அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாகவும் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…