வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்படும் வந்தே மெட்ரோவை இந்திய ரயில்வே 2023 இல் அறிமுகப்படுத்துகிறது.
பல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு, இந்திய ரயில்வே வந்தே மெட்ரோவை அடுத்த அண்டு 2023 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.
இந்திய ரயில்வே, வந்தே மெட்ரோ ரயிலை தயாரித்து வருகிறது, இந்த ரயில்கள் 1950 மற்றும் 60 களில் தயாரிக்கப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவமைப்பு பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது என்றும் டிசம்பர் 2023 க்குள் நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயிலை வெளியிட முடியும் என்றும் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் மேலும் கூறினார். வந்தே பாரத்-3 எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஸ்லீப்பர் கிளாஸுடன் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த ரயில்கள் நீண்ட பயணத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…