வந்தே பாரத் ஒடிசா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.! மத்திய கல்வி அமைச்சர்

Dharmendra Pradhan

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் மற்றும் ராஜஸ்தான் உட்பட 11 மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில்கள் உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-மதுரை-சென்னை, ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும்.

இந்த நிலையில் பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட ஒடிசாவின் இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயிலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஸ்வரில் இருந்து அங்குல் வரை பயணித்தார். அப்பொழுது, மாணவர்களுடன் உரையாடி வந்த அவர், செய்தியாளரிடம், வந்தே பாரத் ஒடிசா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறினார்.

அவர் கூறியதாவது, “பிரதமர் மோடி வேகமாகவும், பெரிய அளவிலும், பெரிய லட்சியத்துடனும், புதிய லட்சியத்துடனும் செயல்படும் விதம் இதுதான். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எனது கிராமத்தின் வழியாகச் செல்வதில் இன்று நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வந்தே பாரத் ஒடிசாவை இணைக்கும் மற்றும் ஒடிசா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும், மேலும் இந்த ரயில் சாதாரண மக்களுக்கானது”. என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்