முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!

vande bharat express

பிலாஸ்பூர் – நாக்பூருக்கு இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்.

சென்னை – மைசூர் உள்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரயில்களுக்கு பெரும்பாலும் பயணிகளின் ஆதரவு இருந்தும் வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் பிலாஸ்பூர் – நாக்பூருக்கு இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 50% அளவுக்கே முன்பதிவு நடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகுந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது. செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மே 17 முதல் 16 பெட்டிகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இந்த ரயிலின் ஆக்கிரமிப்பு விகிதம் 130 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதால், பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்