விரைவில் சென்னை-திருப்பதி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை.!

vande bharat - tirupati

சென்னையில் இருந்து மைசூரு, கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜூலை மாதம் மூன்று வந்தே பாரத் ரயில்களை இயக்கப்படவுள்ளன. அதாவது, கோரக்பூரில் இருந்து லக்னோ, சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் ஜோத்பூரில் இருந்து சபர்மதி வரை ஆகிய மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதில், சென்னை-திருப்பதி இடையே, ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் துவங்குவதற்கான பணிகள் நடப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர். ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் தற்போது வரை கிடைக்கவில்லை.

எனினும், விரைவில் ஒப்புதல் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின் சென்னை- திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, பயண நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்