மாடு மோதி 4-வது முறையாக விபத்தில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்..!
வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி 2 மாதத்தில் 4-வது முறையாக விபத்துக்குள்ளானது.
இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே வாரத் துறையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் அவ்வப்போது மாடுகள் மோதி விபத்துக்குள்ளாகும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மூன்று முறை ரயில் மீது மாடுகள் மோதி விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக மாடு மோதி ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று குஜராத் மாநிலத்தில் வந்தே வாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ரயில் மீது மாடு மோதியது இதனை எடுத்து ரயிலின் முன் பகுதி சிறிதளவு சேதமடைந்தது. உடனடியாக இந்த ரயில் சர்வீஸ் செய்யப்பட்டு கிளம்பியதாக கூறப்படுகிறது.
ரயில் சேவை தொடங்கி 2 மாதத்தில் இது 4-வது விபத்தாகும். ரயிலின் தண்டவாளம் அருகே மாடுகள் உட்பட கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் விலங்குகளின் சொந்தக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.