ஆந்திராவில் பரபரப்பு.! வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்.. 4 மணிநேரம் தாமதம்.!
ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் 4 மணிநேரம் ரயில் பயணம் தாமதமாக புறப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை வழக்கம் போல 5.45 மணிக்கு செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரம் இன்று காலை 9.45 மணிக்கு தான் புறப்படும் என புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
4 மணிநேரம் தாமதம் :
வந்தே பாரத் ரயிலின் இந்த 4 மணிநேர தாமதத்திற்கு காரணம் வந்தே பரத் ரயில் சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தான் என தகவல் வெளியாகியுள்ளது.வந்தே பாரத் ரயிலில் கண்ணடியை சில மர்ம நபர்கள் கல்லால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
தேடுதல் வேட்டை :
இதில்,விசாகப்பட்டினம் வந்தே பாரத் ரவியின் சி-8 பெட்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. இதே பகுதியில் வந்தே பாரத் ரயில் சேதப்படுத்தப்படுவது 4வது முறையாகும். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தற்போது குற்றவாளிகளை ரயில்வே போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.