பள்ளத்தில் வேன் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

இமாசலப் பிரதேசத்திலுள்ள சிரமௌர் எனும் பகுதியில் உள்ள பள்ளத்தில் வேன் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிரமௌர் மாவட்டத்திலுள்ள பச்சாத் எனும் பகுதியில் பேக் பாஷாக் கிராமத்தின் அருகே உள்ள பள்ளத்தில் நேற்று மாலை கார் தடுமாறி விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், திருமண விருந்துக்கு சென்று இருந்தவர்களை ஏற்றிவிட்டு திரும்பிய வேன் பேக் பாஷாக் கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது எனவும், விபத்து நடைபெற்ற இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்பு தான் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியும் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025