ஓடிக்கொண்டிருந்த பொழுது திடீரென தீ பிடித்த வேன் – 9 பேர் காயம்..!
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வேன் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்த பொழுதே தீ பிடித்து இருந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்-அயோத்தி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பிய பொழுது வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த வேனில் இருந்த பயணிகள் பலர் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் லக்னோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தீக்காயமடைந்தவர்களில் 8 பேர் பெண்கள் எனவும், ஒரு குழந்தை இருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தீக்காயமடைந்த ஒரு தாய் மற்றும் அவரது மகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.