வாஜ்பாயின் ஐந்தாவது நினைவு தினம்..! ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை..!
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பாஜக தலைவர்களும் முன்னாள் பிரதமருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.