வாஜ்பாய் நினைவு தினம்.. குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை.!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். வாஜ்பாய் 10 முறை லோக்சபாவிற்கு, ராஜ்யசபாவிற்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025