வாஜ்பாயி உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்…!!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படம் வைக்கப்படது. இந்நிலையில் வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின் உருவம் பொரித்த நாணயம் வெளியீடு செய்து என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயி உருவம் பொரித்த நாணயத்தை வெளியிட்டார்.இதில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.