வைக்கம் 100 : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

தேவனூர் மகாதேவாவுக்கு “வைகோம் விருதை” வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

M K Stalin

கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது வழங்ப்பட்டது . இந்த நிகழ்வு குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

வைக்கம் 100 :

கேரளா மாநிலம் கோட்டையத்தில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா “வைக்கம் 100” எனும் பெயரில் நடைபெற்றது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். அவர் மட்டுமின்றி, கேரள அமைச்சர்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், தமிழக அமைச்சர்கள் ஏ.வி.வேலு, துரைமுருகன், எம்.பி.சுவாமிநாதன், திராவிட கழகத் தலைவர் கே.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மு.க ஸ்டாலின் பேச்சு

நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பெரியார் நினைவிடத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுடன் இணைந்து மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறந்து வைத்த பின் பேசிய மு.க.ஸ்டாலின்”  பெரியாரின் வைக்கம் போராட்ட வெற்றிக்கு பிறகு, இந்தியாவில் அமராவதி கோயில், பார்வதி கோயில்,  நாசிக்  கோயில் நுழைவு , தமிழ்நாட்டில் சுசீந்திரம்,  மதுரை மீனாட்சி கோயில், திருவண்ணாமலை கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், சென்னை பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் என அடுத்தடுத்த கோயில் நுழைவு போராட்டங்கள் வெற்றி கண்டன.“என  வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பினராயி விஜயன்

இதனையடுத்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக எனது அன்பு நண்பரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை கேரளாவிற்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். எங்களுக்குள் அர்த்தமுள்ள உரையாடல் உண்மையிலேயே மனதைக் கவரும் வகையில் இருந்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

எழுத்தாளருக்கு விருது

கடந்த ஆண்டு, வைக்கம் விருது விழாவில் முதன் முதலாக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இன்று நடைபெற்ற வைக்கம் 100 -வது விழாவில் வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவார மஹாதேவா அவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் நெகிழ்ச்சி

வைக்கம் 100 விழா நடந்து முடிந்த நிலையில், எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு விருது வழங்கியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றுபவன் என்ற முறையில், புகழ்பெற்ற இலக்கியச் சின்னமும், சமூக நீதிக்காக அயராது வாதிடும் தேவனூர் மகாதேவாவுக்கு “வைகோம் விருதை” வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.

சமத்துவமின்மைகளை எதிர்கொள்வதற்கும் சமத்துவ சமுதாயத்தை முன்னெடுப்பதற்கும் அவரது படைப்புகள் கருவியாக உள்ளன. தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிரான வரலாற்று இயக்கத்தை முன்னின்று நடத்தியதால், வைக்கமில் இந்த விருதை வழங்குவது ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது. சமூக சமத்துவம் மற்றும் நீதிக்காக தேவனூர் மகாதேவாவின் பணி நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
chess championship 2024
rain news
Keerthy Suresh Marriage
M K Stalin
WI vs ban
tea (1) (1)