இந்தியாவிற்கு தடுப்பூசி ஜூன் மாதத்திற்குள் கிடைக்கலாம் – கிரண் மஜும்தார் ஷா.!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு விஞ்ஞானிகள் அதன் தடுப்பூசி தயாரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு வரும் என்று பெங்களூரைச் சேர்ந்த பயோகான் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், அனைத்து குடிமக்களையும் சென்றடைவது ஒரு சவாலாக இருக்கும் என தெரிவித்தார்.
நேற்று பயோகான் தனது செப்டம்பர் காலாண்டு வருவாயை அறிவித்தது. அதில், 216 கோடி ரூபாயிலிருந்து 169 கோடியாக குறைந்துள்ளது என ஒரு தனியார் செய்தித்தாளுடன் உரையாடலில் தெரிவித்தார். ஜனவரி மாதத்திற்குள், அஸ்ட்ராஜெனெகா போன்ற வேறு சில தடுப்பூசிகள் அல்லது நமது சொந்த இந்திய தடுப்பூசி பாரத் பயோடெக் போன்றவற்றை அங்கீகரிக்க முடியும் என்று நம்புகிறேன்.
அடுத்த 2-3 மாதங்களில் மருத்துவ பரிசோதனையை நாங்கள் முடித்தால், அவை ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்படும். எனவே, கொரோனா தடுப்பூசி 2021-22 க்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.