இண்டிகோ ஏர்லைன்ஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு ஒரு நற் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுஎன்னவென்றால் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சலுகையின் பெயரை ‘வாக்ஸி ஃபேர்’ (’Vaxi Fare’) என அறிவித்துள்ளது. இந்த 10 சதவீத சலுகை உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை ஊக்குவித்தல், பயணிகள் மீண்டும் பயணம் செய்ய இண்டிகோ இந்தச் சலுகையின் மூலம் முன்முயற்சி எடுப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதில், இண்டிகோ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதுமட்டுமின்றி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ’Vaxi Fare’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இந்தச் சலுகையைப் பெற 15 நாட்களுக்குப் பிறகு உங்கள் பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையுடன் டிக்கெட் பெறும் பயணிகள், விமான நிலையத்தில் ஏறும் போது மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிச் சான்றிதழையோ காட்ட வேண்டும்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…