#BREAKING: தடுப்பூசி விலையை நிறுவனங்கள் நிர்ணயிக்க கூடாது.., உச்சநீதிமன்றம்..!

Default Image

தடுப்பூசிக்கான விலை நிர்ணயங்களை தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புப்பூசி  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் செயல்படுகிறீர்கள்.

நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் ஆக்சிஜன்  கேட்டு பல பதிவுகள் பதிவிட்டு வருகின்றனர். இதை நாங்களும்பார்த்துள்ளோம். பல அரசியல் இதனை தடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அப்படி எந்த ஒரு உத்தரவு எந்த அரசும் பிறப்பிக்கக் கூடாது. சமூக சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்கும் முறையை தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, பேசிய நீதிபதிகள், தடுப்பூசிக்கான விலை நிர்ணயங்களை தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி வினியோகத் திட்டத்தின் கட்டுப்பாடு மத்திய அரசு கையில் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் இருக்கும் போது அதில் சமத்தன்மை இருக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும், எனவே மத்திய அரசு அதனை மேற்கொள்ள வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்