#BREAKING : 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி.., மத்திய அரசு அறிவிப்பு

மே 1 முதல் நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முக்கியமான மூன்று ஆலோசனையை பிரதமர் மோடி நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.