18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி..!தயார் நிலையில் உள்ள அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனைகள்…!
அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் போன்ற தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
எனினும், நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில்,தனியார் மருத்துவமனைகளான அப்பல்லோ, மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மே 1 முதல் 18 முதல் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
மேலும்,இதற்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,மேக்ஸ் மருத்துவமனை மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகளை செலுத்த தயாராகி வருவதாகக் தெரிவித்துள்ளன.
மேலும்,ஒரு டோஸுக்கு ரூ.1250 கட்டணமாக பெறப்படும் என்றும்,இது தடுப்பூசி மற்றும் நிர்வாகக் கட்டணங்களை உள்ளடக்கியது என்றும் இம்மருத்துவமனைகள் கூறியுள்ளன.