2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்கும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக மோடி அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ வர்மன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பூசி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும், தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசிக்கான சோதனையில் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால், தடுப்பூசிகள் விரைவில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் இந்தாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும், அதை மலிவு மற்றும் மானிய விலைகளில் விற்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025