இந்தியாவில் அடுத்த மாதம் முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் கிடைக்கும் எனவும், அடுத்த மூன்று மாதங்களில் 100 கோடிக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 81 கோடியைத் தாண்டிவிட்டதாகவும், கடந்த 11 நாட்களில் மட்டும் 10 கோடி டோஸ் தடுப்பூசி நாட்டில் போடப்பட்டு உள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், உபரியாக உள்ள தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் பணி அடுத்த காலாண்டில் அதாவது அக்டோபர் முதல் நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…