இன்று முதல்…நாடு முழுவதும் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்;முன்பதிவு லிங்க் இதோ!

Default Image

15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின்னர், அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது.தடுப்பூசி போட்ட முதல் நாளிலேயே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில்,12-14 வயதுடையவர்களுக்கு கோர்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் அறிவித்தார்.

ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.அதே சமயம்,60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “பூஸ்டர் டோஸ்” செலுத்தும் பணிகளும் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,நாடு முழுவதும் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று (மார்ச் 16) முதல் தொடங்குகிறது.இதற்காக https://www.cowin.gov.in/ என்ற கோவின் இணையதளத்தில்  பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.அதன்படி,பள்ளிகளில் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,12-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கு எவ்வாறு பதிவு செய்யலாம் என்பது இங்கே காணலாம்:
1. http://www.cowin.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி Co-WIN போர்ட்டலைத் திறக்கவும்

2. கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய “பதிவு/உள்நுழை” முறையை கிளிக் செய்யவும்

3. நீங்கள் ஏற்கனவே போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்தால், உங்கள் சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழையவும் இல்லையெனில் புதிய கணக்கை உருவாக்க பதிவு செய்யவும்.

4. குழந்தைகளுக்காக, ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற சில ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்படி கேட்கப்படுவீர்கள். அவர்களிடம் அது இல்லை என்றால், குழந்தைகள் தங்கள் பள்ளி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

5. முதியவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் தகுதியானது கோ-வின் அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட 2 வது டோஸின் தேதியின் அடிப்படையில் இருக்கும்.

6. முதியோருக்கான சரிபார்ப்பு ஆதாரைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படும்.

7. அதுமட்டுமின்றி, அவர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு அல்லது புகைப்படங்களுடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்களையும் பயன்படுத்தலாம்.

8. பின்னர் உங்கள் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

9. சரிபார்ப்பு முடிந்ததும் நீங்கள் உங்களுக்குரிய முதல் தவணையை பதிவு செய்யலாம்.அதற்கு உங்கள் இருப்பிடம், பின்கோடு போன்றவற்றை உள்ளிட்டு, முன்பதிவு நேரத்தைத் தட்டவும்/கிளிக் செய்யவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்