தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் அனுமதி..! அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர் உத்தவ் தாக்கரே…!
தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்திய முதல் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சமீப நாட்களாக சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பையில் இதுவரை 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே முதல் கட்டமாக மின்சார ரயிலில் வரும் 15-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட் மற்றும் பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் மேலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் நேரடியாக டிக்கெட் மற்றும் பாஸை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில், ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட் மட்டும் மாதப் பாசைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் நேரடியாக சென்று டிக்கெட் மற்றும் பாசை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.