30 கோடி மக்களுக்கு தடுப்பூசி முன்னுரிமை- சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.!
நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பேசிய, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசிக்கு 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதில் சுகாதார ஊழியர்கள், காவல்துறை, இராணுவ மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்னணி ஊழியர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்களில் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி மாதத்தில் இந்திய மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறியதுடன், தடுப்பூசிகளின் பாதுகாப்பும், செயல்திறனும் முதல் முன்னுரிமையாக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
“எங்கள் முதல் முன்னுரிமை தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகும். நாங்கள் அதில் சமரசம் செய்ய விரும்பவில்லை. நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன், ஜனவரி எந்த வாரத்திலும், முதல் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் மாநில, மாவட்டங்களில் பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளோம். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முதன்மை பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சுமார் 260 மாவட்டங்களில் 20,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என கூறினார்.
இந்தியாவில் அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ஃபைசர்-பயோடெக் ஆகியவை அவசரகால பயன்பாட்டு ஒப்புதல்களுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.