10.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி – கர்நாடக மாநிலம் தான் முதலிடம்.!
இந்தியாவில் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி கடந்த 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய ஒப்புதல் வழங்கி, நாடுமுழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 10,43,534 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1,38,807 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.