திருப்பதி பக்தர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.!

Default Image

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் பக்கதர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை விழாவையொட்டி வரும் ஜனவரி 2-ஆம் தேதி அதிகாலை திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நடைப்பெற உள்ளது.  இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் பக்கதர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்