#BREAKING: காலியாகவுள்ள 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!

Published by
murugan

ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதனால்,  இந்த அனைத்து இடங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்கும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 24 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 31ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதிக்கு முன் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.  தேர்தல் மற்றும் வாக்குப்பதிவின் போது கொரோனாநெறிமுறையை பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கைபடி, பஞ்சாப் மாநில ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9 அன்று முடிவடைகிறது. மற்ற மாநில உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

17 minutes ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

23 minutes ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

47 minutes ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

59 minutes ago

முடிந்தது விசா கால கெடு.., புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் மீது வழக்கு.!

புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…

2 hours ago

பாகிஸ்தான் ஆதரவு கருத்து., 16 யூ-டியூப் சேனலுக்கு தடை! மத்திய அரசு உத்தரவு!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்  பரிதாபமாக…

2 hours ago