யுபிபிஎஸ்சி பிசிஎஸ் பிரிலிம்ஸ் 2021 தேர்வு கோவிட் தொற்று அதிகரிப்பால் ஒத்திவைப்பு – உ.பி அரசு
யுபிஎஸ்சி தேர்விற்கு மாணவர்கள் தயாராகி வந்த நிலையில் உ.பி அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியா தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்ணையம் புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதில் யுபிபிஎஸ்சி பிசிஎஸ் 2021 ஆம் ஆண்டிற்கான பிரிலிம்ஸ் தேர்வு 2021 ஜூன் 13 முதல் 20 ஜூன் 20 வரை மாநிலத்தின் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற இருந்தது, இது தற்போது கொரோனா தொற்றுநோயின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கூறிய தேர்வுகளின் புதிய தேதிகள் சரியான நேரத்தில் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும், மேலும் புதிய தேதியை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடர்ந்து சோதனை செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக யுபிபிஎஸ்சி தேர்வாணையம் கூறியுள்ளது.