மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு- கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இந்த நிலையில் இது குறித்து,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படுவார் என நினைக்கிறேன்.3 கட்சிகளின் ஆலோசனைக்கு பின் கூட்டாக அறிவிக்கப்படும். பத்னாவிசு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளது,ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.மேலும் பாஜக குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியமைக்க முடியும் என்று நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025