முடிந்தால் சிவசேனாவை உடைத்து பாருங்கள்! அப்படி நடந்தால்… : சவால் விடும் உத்தவ் தாக்கரே!
மஹாராஷ்டிராவில் தற்போது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசிவதாக காங்கிரஸ் தலைவர் சரத்பவரின் மருமகன் அஜித் பவார் திடீரென பாஜவுடன் இணைந்து கொண்டார்.
முதல்வராக பாஜகவை சேர்ந்த தெவிந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மற்ற கட்சியினர் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மஹாராஷ்டிராவில் அஜித்பவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒன்றாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘ முடிந்தால் சிவசேனா கட்சியை உடைத்து பாருங்கள். அப்படி, கட்சியை பிரித்தால் மஹாராஷ்டிரா தூக்கமுடியாது.’ எனவும், ‘ பாஜக அரசானது, இந்திய ஜனநாயகத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.’ எனவும் காட்டமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.