பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் கோஸ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இதில்,இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு இடையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.புதிய எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பட்நாவிஸ் ராஜினாமா செய்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் – சிவசேனா ஆகிய கட்சிகள் சார்பில் சிவசேனா தலைஆவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இதனால் மகாராஷ்டிராவின் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தேசியவாதகாங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநர் கோஸ்யாரி டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…