உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்..! பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பு..!
டோராடூன் – டெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்து வருகிறார். ஏற்கனவே 16 வந்தே பாரத் ரயில்கள் இந்திய முழுவதும் உள்ள மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். அதன்படி, உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
டெல்லி மற்றும் டேராடூன் இடையே இயக்கப்படும் இந்த ரயில் 4 மணி நேரம் 45 நிமிடங்களில் மாநிலங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை கடக்கும். மேலும், இந்த எக்ஸ்பிரஸ் மக்களின் பயண நேரத்தை குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.