உத்தரகாண்டில் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 7 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் தேஹ்ரி கர்வால் எனுமிடத்தில் பள்ளி வேன் ஒன்று பாலத்தின் மீது செல்கையில் திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீதிருந்த தடுப்பு சுவரை இடித்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த வேனிற்குள் ஓட்டுநர் உட்பட 18 பேர் இருந்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் 7 மாணவர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் பேரிடர் குழுவால் மீட்கபட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.