உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் 18,000 கோடி மதிப்பில் பல நலத்திட்டங்களை அங்கு இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். மாநிலத்தின் டேராடூன் எனும் நகரில் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி திட்டங்களில் 8000 கோடி மதிப்பிலான பொருளாதார வழித்தட சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் நடமாட்டத்திற்கு இடையூறு இல்லாத வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், 500 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்லும் பிரதமர் நாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 120 மெகாவாட் திறனுள்ள நீர்மின் நிலைய திட்டத்தையும், நறுமண ஆய்வகத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது .
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…