உத்தரகண்ட் சுரங்க விபத்து..! இறுதி கட்டத்தை எட்டிய மீட்புபணிகள்..!
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை சுரங்கம் தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து.! மஞ்சள் அலர்ட்… மீட்பு பணியில் தடையில்லை.!
பல முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது மலையை குடைந்து மேலிருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாள் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளுக்கு நடுவில் மீட்புக் குழாய்க்குள்ளே சிக்கி இருந்த ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள குழாய்க்குள்ளிருந்து மனிதர்கள் மூலமாக துளையிடும் பணி வேகமாக நடந்து வருகிறது. மீட்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.