uttarkashi tunnel rescue [Image source : PTI]
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 12ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில், சில்க்யாரா-பர்கோட் பகுதி சுரங்கப்பாதையில் வேலைபார்த்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உள்ளே சிக்கி கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணிகள் இன்றோடு 16வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்கியுள்ளனர். முதல் நாளான நேற்று சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது. அடுத்து சிக்கலாக உள்ள பகுதிகளில் கைகளை கொண்டு சுரங்கத்தை தோண்ட முயற்சிக்க உள்ளனர்.
இது குறித்து, உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புக்குழு (NDMA) உறுப்பினர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் மீட்புப்பணிகள் பற்றி கூறுகையில், மீட்பு பணிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான உணவும், மருந்தும் தேவைக்கேற்ப உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது. அவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்படைந்து விட்டுவிட கூடாது என அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மீட்பு பணியில் பாதுகாப்புக்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வானிலை ஆய்வு அறிக்கையின்படி, இப்பகுதியில் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வானிலை அறிக்கைகளால் மீட்பு பணிகள் தடைபட வாய்ப்பில்லை. சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நேற்றைய தினம் பயன்படுத்தப்பட்ட மீட்பு பணி கருவியின் உடைந்த பாகங்கள் இன்று காலை முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. அவ்வாறு செய்யும்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது இயந்திரத்தில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்திய இராணுவப் பொறியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் கலந்தாலோசித்த “எலி துளையிடும் முறை ” எனும் நடவடிக்கை மூலம் பயிற்சிபெற்ற மீட்பு படையினர்களை உள்ளே அனுப்பி கைகளால் துளையிடும் முறை செயல்படுத்தப்படும் எனவும், அவர்கள் இரண்டு குழுக்களாக உள்ளே செல்வார்கள் எனவும் மீட்புப்பணிகள் குறித்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் கூறினார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…