உத்தரகாண்ட் : பாஜகவில் இணைந்தார் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா…!
உத்தரகாண்ட் மாநிலத்தின் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா பாஜகவில் இணைந்துள்ளார்.
உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா அவர்கள் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.
முன்னதாக நைனிடால் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக சரிதா தெரிவித்த நிலையில், கட்சியினர் அவர் அந்த தொகுதியில் நிற்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும், இதனால் தான் அவர் பாஜகவில் இணைந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இன்று சரிதா அவர்கள் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.