உத்தரகாண்ட் நிலச்சரிவு வழக்கு – ஜன.16ல் விசாரணை!
ஜோஷிமத் நிலச்சரிவு தொடர்பான வழக்கு விசாரணை 16ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது தொடர்பான வழக்கு ஜனவரி 16-ல் விசாரணை நடைபெறுகிறது. ஜோஷிமத் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் மாற்று வீடு, நிதியுதவி வழங்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பேரிடர் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும் உதவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து முக்கிய விவகாரங்களும் உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக வர வேண்டும் என்று அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது அவர்கள் கவனத்திற்கு இதை எடுத்து செல்லலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், 16-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.