உத்தரகாண்ட் கோர விபத்து : 12 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து மீட்பு படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சக்ராத் பகுதி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.