உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்து..! அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!
உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத், தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், பாபோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.