உத்தரகண்ட் வன அதிகாரிகள் மிகவும் அரிதான ‘சிவப்பு பவள குக்ரி’ பாம்பை மீட்டனர்.!

Default Image

உத்தரகண்ட் மாநிலத்தில் மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு மீட்கப்பட்டது,

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் காணப்பட்ட ஒரு மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையால் மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நைனிடாலின் பிந்துக்கட்டா பகுதியில் இருந்து பாம்பு மறைந்திருந்த ஒரு வீட்டில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.

வன அதிகாரிகள் கூறுகையில், 1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் இந்த அரிய பாம்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த பாம்பின் பெயர் ‘குக்ரி’ என்று ஏன் வைத்திருப்பது என்றால்  அதன் பற்கள் குக்ரியின் கத்தி போல வளைந்திருக்கும்.

ஒரு வன அலுவலர் நிதீஷ் மணி திரிபாதி கூறுகையில், நைனிடால் மாவட்டத்தின் பிந்துகட்டா பகுதியில் உள்ள குர்ரியா கட்டா கிராமத்தில் வசிக்கும் கவீந்திர  கோரங்காவிடம் இருந்து வெள்ளிக்கிழமை காலை எங்களுக்கு பாம்பை மீட்பதற்கான அழைப்பு வந்தது என்றார்  “நாங்கள் பாம்பை மீட்பதற்காக அங்கு சென்றபோது, ​​கிராமவாசிகள் பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் சாக்கில் வைத்திருந்தார்கள்” என்று அவர் கூறினார்.

பாம்பை மீட்ட பிறகு அதை காட்டில் விட்டன
ரெட் கோரல் குக்ரி மிகவும் அரிதான பாம்பு என்றும் இது உத்தரகண்டில் இதுவரை இரண்டு முறை கண்டறியப்பட்டள்ளது என்று வனவிலங்கு நிபுணர்  தெரிவித்தார். விஷம் இல்லாத இந்த பாம்பு இரவு நேரத்தில் மண்புழுக்கள், பூச்சிகள் மற்றும் லார்வாக்களுக்கு உண்ணுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்