உத்தராகண்ட் வெள்ளம் : 62 பேரின் உடல்கள் மீட்பு ,142 பேரை தேடும் பணி தீவிரம்
உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 13-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில்,மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜோஷிமத் மற்றும் பிபல்கோட்டி இடையே ஹெலாங்கில் உள்ள அலக்நந்தா கரையில் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டதாக சாமோலி மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 142 பேர் இன்னும் காணவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து 28 மனித உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட 62 பேரில் 33 சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.