#Breaking: உத்தரகண்ட் அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா!
உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தனது முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். உட்கட்சி பிரச்சனை தொடர்பாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், அங்கு உள்கட்சியில் சில குழப்பங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியில் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைமை அலுவலகத்திற்கு புகாரளித்தனர்.
இதன்காரணமாக இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தார். அதன்பின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஆளுநர் பேபி ராணி மயூரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்தாண்டு இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ராஜினாமா செய்துள்ளது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த முதல்வராக யார் இருக்கப்போகிறார் என்பது குறித்த ஆலோசனை, விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.