தடுப்பு பணிக்கு “5 மாத சம்பளத்தை கொடுத்த” உத்தரகண்ட் முதல்வர்.!
கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 1251 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள் நிதி கொடுக்கலாம் என கூறினார்.
இதைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் , மற்றும் சினிமா பிரபலங்கள் தொடந்து நிதி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தனது ஐந்து மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் முதல்வரின் மனைவி சுனிதா ராவத் ரூ .1 லட்சம் மற்றும் அவரது இரண்டு மகள்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ .52 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால்7பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 2 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.